மான் வேட்டையாடியவர்களை பிடிக்கச் சென்ற போது ஏற்பட்ட சண்டையில் 3 போலீசார் பலி

மான் வேட்டையாடியவர்களை பிடிக்கச் சென்ற போது ஏற்பட்ட சண்டையில் 3 போலீசார் பலி
இலங்கைக்கு யூரியா வழங்க மத்திய அரசு முடிவு
May 14, 2022
மான் வேட்டையாடியவர்களை பிடிக்கச் சென்ற போது ஏற்பட்ட சண்டையில் 3 போலீசார் பலி
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்க விரைவில் அறிவிப்பு
May 14, 2022


வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மான் வேட்டையாடியவர்களை பிடிக்கச் சென்ற போது ஏற்பட்ட சண்டையில் 3 போலீசார் பலி

போபால்-மத்திய பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் மான்களை வேட்டையாடியவர்களை பிடிக்கச் சென்ற மூன்று போலீசார், துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டனர்.

latest tamil news

மத்திய பிரதேசத்தின், குணா மாவட்டம் சாகா பர்கேடா கிராமம் அருகேயுள்ள வனப்பகுதியில் சிலர் மான்களை வேட்டையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்படி, நேற்று அதிகாலை 3:00 மணியளவில் போலீசார் அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது வனத்தில் மறைந்திருந்த வேட்டைக்காரர்கள் திடீரென துப்பாக்கியால் சுடத் துவங்கினர்.

போலீசாரும் பதிலுக்கு சுடத் துவங்கினர்.இந்த சண்டையில், சப் – இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஜாதவ் மற்றும் இரண்டு போலீசார் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக, உயரதிகாரிகளுடன், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆலோசனை நடத்தினார். அதில், உயிரிழந்த மூன்று போலீசாரையும் வீரமரணமடைந்தவர்களாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டது.

மூன்று போலீசார் குடும்பத்தாருக்கும், தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறியுள்ளதாவது:மூன்று போலீசார் கொல்லப்பட்டது மிகவும் வருத்தமளிக்கிறது.

latest tamil news

சம்பவம் நடந்த இடத்துக்கு உடனடியாக செல்லாத குவாலியர் ஐ.ஜி., அனில் சர்மா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.துப்பாக்கிச் சூடு நடந்த பகுதிக்கு அருகில் உள்ள கிராமத்தில் குண்டுகள் பாய்ந்த நிலையில், ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. அவர், வேட்டை கும்பலைச் சேர்ந்தவராக இருக்கலாம். விலங்குகளை வேட்டையாடும் கும்பலைச் சேர்ந்த, ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை கைது செய்ய நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

AdvertisementSource link

Leave a Reply

Your email address will not be published.