பா.ஜ., ஆட்சி அமைத்து 8 ஆண்டுகள்… கொண்டாட்டம்: வீதி தோறும் பிரசாரம் செய்ய முடிவு

குருவுடன் மோதும் சிஷ்யர்!  காங்கிரசில் யாருக்கு எம்.பி., பதவி?
குருவுடன் மோதும் சிஷ்யர்! காங்கிரசில் யாருக்கு எம்.பி., பதவி?
May 14, 2022
பாலிவுட் நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா : கேன்ஸ்  விழாவில் பங்கேற்கவில்லை
பாலிவுட் நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா : கேன்ஸ் விழாவில் பங்கேற்கவில்லை
May 14, 2022


மத்தியில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்து எட்டு ஆண்டுகள் நிறைவு பெற உள்ளது. இதையடுத்து சிறுபான்மை சமூகத்தினருக்காக செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து வீதிகள் தோறும் பிரசார கூட்டங்கள், சிறிய அளவிலான ஆலோசனை கூட்டங்கள், கருத்தரங்குகள் ஆகியவற்றை நடத்துமாறு கட்சியின் சிறுபான்மை பிரிவினருக்கு, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார்.

பா.ஜ., ஆட்சி அமைத்து 8 ஆண்டுகள்… கொண்டாட்டம்: வீதி தோறும் பிரசாரம் செய்ய முடிவு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு, 2014ல் பொறுப்பேற்று எட்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, சிறப்பான கொண்டாட்டங்களுக்கு, பா.ஜ., தயாராகி வருகிறது.

சிறு கையேடு

கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா காரணமாக, எந்தவொரு நிகழ்ச்சியும் நடத்த முடியாத நிலை இருந்தது. அவற்றை ஈடுகட்டும் வகையில், இந்த ஆண்டு மொத்தமாக கொண்டாடி விட வேண்டுமென, நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆர்வமாக உள்ளனர்.இதையடுத்து, கடந்த சில வாரங்களாகவே மேலிடத் தலைவர்கள் இது பற்றிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவின்பேரில், 26 பக்கங்களைக் கொண்ட சிறு கையேடு தயாரிக்கப்பட்டுஉள்ளது.

8 ஆண்டுகள்

‘சேவை, சிறந்த நிர்வாகம், ஏழைகளுக்கான நலன்கள்’ என்ற தலைப்பிலான இந்த கையேட்டில், மத்திய அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டு மென அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அது பற்றிய விபரம்:ஒவ்வொரு பா.ஜ., தொண்டரும், 10 நாட்களுக்கு, மொத்தம் 72 மணி நேரம் செலவிட்டு, மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் பிரசாரம் செய்திட வேண்டும். கொரோனா தடுப்பூசி பணிகள் உள்ளிட்ட, பொது சேவைகளில் ஈடுபட்ட கட்சி தொண்டர்கள், மற்றும் மத்திய அரசின் நலத்திட்டங்களின் நேரடி பயனாளிகளை அடையாளம் கண்டு, அவர்களை கவுரவிக்க வேண்டும்.பா.ஜ., அரசு, பல்வேறு துறைகளில், கடந்த எட்டு ஆண்டுகளில் செய்துள்ள சாதனைகளை, பாடல்கள், இணையதளம், பாக்கெட் டயரிகள் என விதவிதமான வழிகள் வாயிலாக மக்களிடம் சென்று சேர்க்க வேண்டும்.

latest tamil news

சமூக வலைதளங்கள், சினிமா தியேட்டர்கள் ஆகியவற்றிலும், மத்திய அரசின் சேவைகளை விளம்பர படங்களாக எடுத்து பொதுமக்களிடம் வெளிப்படுத்த வேண்டும்.மத்திய அமைச்சர்கள், நடைபயணம் மேற்கொண்டு மக்களைச் சந்திக்க வேண்டும். பா.ஜ., ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், மாநில அரசின் நலத்திட்டங்கள் குறித்த சிறு புத்தகங்களை தயாரித்து மக்களிடம் வினியோகிக்க வேண்டும்.

கருத்தரங்கு

சிறுபான்மை சமூகங்களுக்காக செய்யப்பட்ட நலத்திட்ட நடவடிக்கைகள் குறித்து வீதிகள் தோறும் பிரசாரங்கள், சிறு சிறு ஆலோசனை கூட்டங்கள், கருத்தரங்குகளை, வரும் ஜுன் 6 முதல் 8 வரையில் நடத்த வேண்டும்.இளைஞரணி சார்பில், ஜுன் 7 முதல் 13 வரையில், மாவட்டங்கள் தோறும், பைக் பேரணிகளை நடத்த வேண்டும்; அவற்றில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

– நமது டில்லி நிருபர் –Source link

Leave a Reply

Your email address will not be published.